Tamil Christian Radio

வேத-வரைபடங்கள்

Watch TV

Rev. Sam TV

House of Prayer

 

 

 

 

 

 

 

  பூனோன்

 அம்மான்  கீலேயாத்- மலைப்பகுதி  கீலேயாத்- பள்ளத்தாக்கு  ஏதோம்
 பெத்ரா  வாடி-ரும்  யாப்போக்கு  கல்லிர்ஹோ
 மடபா- வரைபடம்  பூனோன்  ஜெராஷ்  பெத்தானி
 யோர்தான்  மோவாப்  பாப் எத்-த்ரா அக்குபா

 

பூனோன் பிரதேசம்

பைனான் என்பது இப்போது இதனுடைய பெயர், அதிகமான ஆய்வாளர்கள்  பழையேற்பாடடில் உள்ள பூனோன் இதுதான் என்று சொல்கின்றனர். வேதாகமத்தில் இந்தப்பெயர் ஒரு இடத்தில் மட்டும் தான் வருகின்றது. வனாந்திர யாத்திரையின போது (எண்ணாகமம் 33: 42-43)

சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.

பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.

ஓபோத் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
 

 

 

 

ரோமர்கள்

கி.மு 4000 - கி.பி 630 வரை இங்கே மக்கள் வாழ்ந்தார்கள். ரோமர்கள் காலத்தில் இதனை பைனோ என்று அழைத்தனர்.

ரோமர்களால் கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தில், கால்வாய் வழியாக வரும் தண்ணீரை இந்த அணைக்கட்டுக்குள் சேர்த்து வைத்தனர்.

ஆயிரத்திற்கு மேற்பட்ட புதைகுழிகள் இந்த பைனானிலே கண்டுபிடிக்கப்பட்டது. அதிகமானவைகள் பைசான்டைன் காலத்தை சார்ந்தவை.

 

 

 

 

செப்பு- உலோக மண்

பைனானிலே செப்பு சுரங்கம் காரணப்பட்டது (முற்காலத்து கதைகள் மூலமாக இதனை அறியலாம்). மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக செப்பு எடுக்கப்படும் இடங்களில் பைனானும் ஒன்று.
 

 

 

 

 

 

 

 

 

செப்பு - சுரங்கம்

இங்குள்ள சுரங்கங்கள் இப்பொழுதும் உள்ளே நுழையக்கூடிய வகையில் உள்ளன. சில சுரங்கங்கள் செங்குத்தாகவும், சிலது மட்டமான தரையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இவைகளை நீங்கள் இந்தப்படத்திலும் கீழ் உள்ள படத்திலும் காணலாம்.