ஜெராஷ்

 அம்மான்  கீலேயாத்- மலைப்பகுதி  கீலேயாத்- பள்ளத்தாக்கு  ஏதோம்
 பெத்ரா  வாடி-ரும்  யாப்போக்கு  கல்லிர்ஹோ
 மடபா- வரைபடம்  பூனோன்  ஜெராஷ்  பெத்தானி
 யோர்தான்  மோவாப்  பாப் எத்-த்ரா அக்குபா

 

ஜெராஷ்

யோர்தான் நதிக்கு கிழக்கேயுள்ள பட்டணங்களில் ஒன்று ஜெராஷ். இதுவும் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் தெக்கப்போலி என்று அழைக்கப்பட்ட பட்டணங்களில் ஒன்றாக இருந்தது. இயேசு கிறிஸ்துவைப்பற்றி இந்தப்பட்டணத்தார் நன்கு அறிந்திருந்தனர். (மத்தேயு 4:25, மாற்கு 7:31). இந்த ஊருக்கு சில மைல்கள் தள்ளி யாப்பேக்கு நதி இருக்கின்றது. யாக்கோபு இரவு முழுவதும் போராடி ஜெபித்த இடம்.

 

 

 

 

 

 

ஓவல் பிளாசா

வேதாகமத்திலுள்ள ஜெராசா-தான் தற்காலத்து ஜெராஷ். ஜெராசா ரோமர்களுடைய டெக்காப்போலிஸ் நகரத்தின் ஒரு பகுதியாக விளங்கியது மட்டுமல்ல மிகவும் பாதுகாப்பான பகுதியாகவும் விளங்கியது.

ஜெரசாவினுடைய உச்சநிலை என்னவென்றால், 2ம் நூற்றாண்டில் அதன் ஜனத்தொகை 20,000- 25,000.

அதிகமான சிதைவுகள் ரோமர் காலத்தையும் பைசான்டன் காலத்தையும் சார்ந்ததாக உள்ளது. இதன் சிதைவுகளை சீட்சன் என்பவர் 1806ம் ஆண்டுகளில் கண்டுபிடித்தார். 1925 இதை மீளக்கட்டத்தொடங்கினர்

 

 

 

அர்த்தமிஸ்- இன் கோவில்

இரண்டாம் நூற்றண்டளவில் இந்த அர்த்தமிஸ்-ன் கோவில் கட்டப்பட்டது. இந்த தூண்கள் 12 மீட்டர் உயரமுடையது. இது ஒரு பெண்தெய்வம். இவளை இயற்கையின் தெய்வமாகவும், வேட்டையாடுதலின் தெய்வமாகவும் வழிபட்டனர்.

ரோமர்கள் இதை தியானாள் (னுiயெ)  என்று அழைத்தனர்.

இவளுடைய கோவில் எபேசுவிலும் இருந்தது.(அப்போஸ்தலர் 19)
 

 

 

 

 

 

 

ஓடு பாதை

இந்த குதிரைகள் ஒட்டப்போட்டி நடக்கும் பந்தய-பாதை 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 10.000ல் இருந்து 15.000 வரை பார்வையாளர்கள் இதனை பார்வையிடுவதற்கு வருவார்கள்.
 

 

 

 

 

 

 


 

 

அரங்கம் - தெற்கு

கெரசாவிலே மூன்று அரங்கங்கள் இருந்திருக்கின்றது. இந்த தெற்கில் உள்ள அரங்கம் கி.பி 90 அளவில் ஆரம்பமானது. இதிலுள்ள 33 வரிசைகளிலும் 3000 பேர் இருக்கக்கூடிய வசதியுள்ளது.

பக்கத்து வாயிலுக்கு மேலாக இராஜ வம்சத்தினருக்கான இருக்ககைள் உள்ளது.

 

 

 

 

 

 

 

எழுதப்பட்ட இருக்கைகள்

இருக்கைகளில் கிரேக்க எழுத்துக்களால் பெயரிடப்பட்டுள்ளது. யாருடைய இருக்கை என்று அடையாளம் காண்பதற்காக.