Last Updated on Saturday, 27 December 2008 11:20
Ancient script
|
மொழிகள், மற்றும் எழுத்துக்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களின் முடிவுரை: மெசொப்பத்தாமியா- கி.மு 3500- 3700 (சுமேரியா தற்கால ஈராக்).
எழுத்துருக்கள், மொழிகள், வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி முதல் முதலாக சுமேரிய மக்களின் மத்தியில்தான் எழுத்துக்கள் உருவாகியிருக்க வேண்டும். அதன்பின்பு அதிலிருந்து தான் மற்ற மொழிகளின் எழுத்துக்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்புகின்றனர். அதற்கு காரணம் உலகிலுள்ள அநேக மொழிகளில் பல வார்த்தைகள் ஒரேமாதிரி இருப்பதும், அநேக மொழிகளின் எழுத்து நடைகள் ஒரேவிதமான எழுத்து அமைப்புக்களை கொண்டிருபதும் காரணமாகும்.
வேதாகமத்தின் அடிப்படையில்: பாபேல் கோபுரத்தை ஜனங்கள் கட்ட வெளிக்கிடும் சமயத்தில், அவ்விடத்தில் தேவன் பாஷைகளை தாறுமாறாக்கினார். (ஆதியாகமம் 11: 1- 9). பாபேல் நகரம் நிம்ரோத் எனும் மனிதனால் கட்டப்பட்டது. (ஆதியாகமம் 10: 10). இந்த பாபேல் நகரமே பிற்காலங்களில் பாபிலோன் என்று வழங்கப்பட்டது. (பாபிலோன் தற்கால ஈராக்) ஈராக்கில் (பாபேல்) தான் மொழிகள் உருவாகியிருக்க வேண்டுமென்று வேதாகமத்தில் எழுதியிருப்பதை பல ஆய்வாழர்கள் ஏற்றுக்கொள்கின்றனர், ஏனெனில் உலகத்தின் முதல் ஆதி நாகரிகம் ஈராக்கில் தோன்றியது. விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமும் ஈராக்கை சேர்ந்தவர்தான். ஊர் பட்டணம் ஈராக்கிலுள்ளது.
மொழிகள் தோன்றிய காலங்கள் வேறு, எழுத்துக்கள் தோன்றிய காலங்கள் வேறு.
வேதாகமத்தின் அடிப்படையில் தேவனாகிய கர்த்தரே எழுத்தை தோற்றுவித்தார். ஆதியாகமம் 4: 15 இல் தேவனாகிய கர்த்தர் காயீன் மேல் ஓர் அடையாளத்தையிட்டார்.அது எப்படிப்பட்ட அடையாளம் என்று தெரியார்து. ஆனால் அதனை மனிதர்கள் வாசிக்கும்படியாக (புரிந்து) செய்தார்.
|