Tamil Christian Radio

வேத-வரைபடங்கள்

Watch TV

Rev. Sam TV

House of Prayer

 

 

 

 

 

 

 

 

நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்துமனந்திரும்பிஆதியில் செய்த
கிரியைகளைச் செய்வாயாக;. -  வெளிப்படுத்தின விசேஷம் - 2.5.

 

புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் ஆரம்பநாட்களில் ஒருவரையொருவர் எவ்வாறு பிரியப்படுத்தலாம் என்று கவனமாக இருப்பார்கள். எது பிடிக்கும்எது பிடிக்காது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.  துணையின் செயல்களை பாராட்டுவதிலும்,  சுவையான உணவளிப்பதிலும்எதிர்பாராத அன்பளிப்புகளைக் கொடுப்பதிலும் தீவிரம் காட்டுவர்கள். சிரத்தை எடுப்பார்கள்.  ஆனால் சில ஆண்டுகள் கழித்து பார்த்தால் பெரும்பாலான தம்பதியினரிடையே இந்த உணர்வு தன்மைகள் மறைந்து போய்விடுகிறது. 
குடும்பமாக இணைந்து வாழ்ந்தாலும்,  சரியாக அவரவருடைய பொறுப்புகளை நிறைவேற்றினாலும் ஒருவரைக் குறித்து மற்றவருக்கு அலட்சிய மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது.

 

அதேப்போல ஒரு அலுவலகத்தில் வேலையில் சேரும்போது முதல் நாளில் சரியான நேரத்திறகு சென்று விடுகிறோம்.  கடினமாக உழைக்கிறோம். மேலதிகாரியிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறோம். அவருக்கு பிடித்ததையும், பிடிக்காததையும் மிகவும் விரைவாகத் தெரிந்து கொள்கிறோம்.  ஆனால் 3 அல்லது 5 ஆண்டுகள் கழித்து நிலமை என்ன ஆகிறது?  காலதாமதம், பொறுப்பின்மை போன்ற அலட்சியம் நம்மில் அநேகருக்கு ஏற்பட்டு விடுகிறதல்லவா?

 

இப்போது நாம் நம்முடைய பாய்ண்டுக்கு வருவோம்.  ஆண்டவரோடுள்ள நமது உறவு எப்படிக்
காணப்படுகிறது? இரட்சிக்கப்பட்ட அந்த நாளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.  அபிசேஷகம்
பெற்ற அந்த நிமிடங்களை சற்று எண்ணிப் பாருங்கள் அன்று மற்ற எல்லாவற்றையும் விட
அவரை பிரியப்படுத்தவே ஆசைப்பட்டோம்.  வாழ்வின் சிறு சிறு காரியங்களுக்கு கூட
அவருடைய ஆலோசனையை நாடினோம்.  இதயத்தின் ஆழத்திலுள்ள எண்ணங்களையும்
விருப்பங்களையும் கூட அவரோடு பகிர்ந்து கொண்டோம்.  இன்று தேவனோடுள்ள
உங்களுடைய உறவு எப்படியிருக்கிறது. இன்னும் அனலாகியுள்ளதா?  அல்லது அனலுமின்றி
குளிருமின்றி வெதுவெதுப்பாய்க் காணப்படுகிறதா?  

 

வேதத்தில் இதே நிலமையிலுள்ள எபேசு என்ற சபைக்கு தேவன் கூறும் ஆலோசனை என்ன
தெரியுமாமேலே (துவக்கத்தில்) குறிப்பிட்ட வசனத்தை வாசித்துப் பாருங்கள்.  ஆம்
முதலவதாக 'நினையுங்கள்ஆதியில் தேவன் மேல் கொண்ட அன்பை நினையுங்கள். 
தற்போதுள்ள நிலையை அதோடு ஒப்பிட்டு பாருங்கள்.  அடுத்ததாக 'மனந்திரும்புங்கள்'.
முதலாவது உங்களை கர்த்தருடைய பாதத்தில் தாழ்த்தி அவரிடம் உங்கள் உள்ளத்தை ஊற்றி
ஜெபியுங்கள். எந்த காரியம் என்னை அவரை விட்டு விலக செய்தது என்று சிந்தித்து மனம்
மாறுங்கள். ஆதியில் கொண்ட அன்பை பெற தேவன் நிச்சயம் உதவுவார்.

 

 

ஜெபம் : எங்களை அளவில்லாமல் நேசிக்கும் எங்கள் நல்ல கர்த்தரேஉம்மைத் துதிக்கிறோம்.
ஆண்டவரே எங்களை உம்முடைய பாதபடியிலே தாழ்ததுகிறோம். நாங்கள் ஆதியிலே உம்மேல்
கொண்ட அந்த அன்பின் வித்தை இன்று எங்கள் உள்ளத்தில் வைக்கிறோம். என்றும் உம்மை விட்டு விலகாதப்படி காத்துக்கொள்ளும்தயவாய் இறங்கி எங்கள் பாவங்களை மன்னித்தருளும். உம்மோடு நெருங்கி ஜீவிக்க கிருபையை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

 

 

கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு
 
Note:  If you don't receive our Anudhina Manna from  Sunday to Friday, kindly let us know. Saturday  Anudhina Manna will not be posted.