ஊழியர்களுக்கான அடிப்படை தகுதிகள் (3)

வேதாகத்திலிருந்து

பிதாவும் கிறிஸ்துவும் எப்படி ஒன்றாயிருக்கிறார்களோ அப்படி நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் !


 


 

 

யோவான் 17ம் அதிகாரத்தில்  இயேசுவானவர் தாம் மரிக்க முன்பு தம்முடைய சீடர்களுக்காகவும், அவர்கள் மூலம் இரட்சிக்கப்படுகின்ற மக்களுக்காகவும் ஜெபித்தார். இந்த ஜெபத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே உழியத்தை சரியாக செய்ய முடியும்.  ஊழியர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு கிறிஸ்தவனும் இதற்கேற்றாற்போல் நடக்க வேண்டும். இதுதான் கிறிஸ்துவின் வாஞ்சை.

 

யோவான் 17ம் அதிகாரம் முழுவதையும் வாசியுங்கள்

யோவான் 17 அதிகாரம்

11. நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, ீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.


14. நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.


16. நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.


17. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.


18. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
19. அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.


20. நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.


21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.


22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.


23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

 

ஊழியம் செய்கின்ற அனைவரும்  கிறிஸ்துவின் வாஞ்சையை நிறைவேற்றுவீர்களா !!!!!! ???????