இஸ்ரவேல் - அறிமுகம்
Last Updated on Friday, 16 January 2009 10:05
![]() |
| இஸ்ரவேல் - அறிமுகம் | சீயோன் மகாநாடு | முதலாவது உலகப்போர் |
| இரண்டாவது உலக மகாயுத்தம் | சுதந்திர தினம் | யுத்தங்கள் |
| இஸ்லாமியர்கள் | அரசியல் தலைவர்கள் |
கானான்
தற்போதைய இஸ்ரவேல் முன்பு கானான் என்று அழைக்கப்பட்டது. அங்கே கானானிய மக்கள் குடியிருந்தனர். பிற்காலத்தில் ஆபிரகாம் எனும் மனிதன் ஊர் (தற்காலத்து ஈராக்) எனும் பட்டணத்திலிருந்து வந்து அங்கே குடியேறினான். அவன் மூலமாக இஸ்ரவேல் சந்ததி உருவாகியது.
ஆபிரகாமுக்கு வாக்கு பண்ணிய தேசத்தை, யோசுவாவினுடைய காலத்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். அதன் பின்பு நியாயாதிபதிகளின் காலம். கடைசி நியாயாதிபதியும், தீர்க்கதரிசியுமான சாமுவேலிடம் ஜனங்கள் தங்களுக்கு ஒரு இராஜா வேண்டுமென்று முறையிட, தேவனாகிய கர்த்தர் சவுலை கி. மு 1050 அளவில் சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக அபிஷேகித்தார். பின்பு தாவீது, அவன் மகன் சாலமோன் சமஸ்த இஸ்ரவேலையும் அரசாட்சி செய்தார்கள்.

சாலமோனினால் கட்டப்பட்ட தேவாலயம் (கற்பனைச்சித்திரம்)
சாலமோனுடைய மகனுடைய காலத்தில் இஸ்ரவேல் இரண்டாக பிளவுபட்டு யூதா என்றும், இஸ்ரவேல் என்றும் இரு நாடுகளாக மாறியது. யூதாவின் கடைசி இராஜா செதேக்கியா. அரசாட்சி வருடம் கி.மு 597 .
சாலமோன் இராஜாவினால் கட்டப்பட்ட தேவாலயம் பாபிலோனியரினால் கி.மு 586 அளவில் முற்றிலும் அழிக்கப்பட்டது.
536 - 142 கி.மு மேதிய, பெர்சிய காலம்
538 - 515 அனேக யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து ஆலயத்தை
மறுபடியும் புதுப்பித்து கட்டினார்கள்.
கி.மு 332 அளவில் மகா அலக்ஸாந்தர் இஸ்ரவேலை பிடித்தார்.
கி.மு 166 - 160 மெக்காபியர்களின் கிளர்ச்சி.
கி.மு 63 ஆம் ஆண்டு ரோம தளபதி பொம்பேயினால் இஸ்ரவேல் பிடிக்கப்பட்டது..
63 - 313 கி. பி வரை ரோம சாம்ராஜ்ய காலம்
ஏரோதினால் இரண்டாவது தேவாலயம் கட்டப்பட்டது. கி. பி 70 தீத்து
இராஜாவினால் முற்றிலும் அழிக்கப்பட்டது.
313 - 636 கொன்ஸ்டன்டெய்ன் ஆட்சி
636 - 1099 அராபியர்களின் ஆட்சி ( பள்ளி வாசல் கட்டப்பட்டது Dom)

1099 - 1291 லத்தீன் ஆட்சிக்குட்டது
1291 - 1516 மம்லக் ஆட்சி
1517 - 1917 இஸ்ரவேல் ஒட்டோமான் ஆட்சிகுட்பட்டது ( துருக்கி )
ஒஸ்மான் மன்னரால் ஆரம்பிக்கப்பட்ட இராச்சியம், ஆதலால் ஒஸ்மான் இராஜ்யம் என்றும் அழைப்பர்.
2600 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரவேல் பல்வேறு சாம்ராச்சியங்களுக்கு
கீழ்ப்பட்டிருந்தமையால், இஸ்ரவேல் எனும் தேசம் வரைபடத்தில் கூட காணப்படவில்லை.
இஸ்ரவேலிலே சொற்ப யூதர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.வெளி தேசங்களில் அகதிகாளாக வாழ்ந்து வந்த யூதர்களின் எண்ணிக்கை அவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாயிருந்தது..
| < Prev |
|---|








