ஜோர்தான்

Jordan

 யோர்தான் -சிறு குறிப்பு 

 அம்மான்  கீலேயாத்- மலைப்பகுதி  கீலேயாத்- பள்ளத்தாக்கு  ஏதோம்
 பெத்ரா  வாடி-ரும்  யாப்போக்கு  கல்லிர்ஹோ
 மடபா- வரைபடம்  பூனோன்  ஜெராஷ்  பெத்தானி
 யோர்தான்  மோவாப்  பாப் எத்-த்ரா அக்குபா

 

ஜோர்தான் அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது. அக்கபா குடாவினதும் இறந்த கடலினதும் கரைகள் யோர்தானுக்கும் இசுராலுக்குமிடையே பகிரப்பட்டுள்ளது. யோர்தான் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும். அரசன் நாட்டின் தலைவரும் தலைமை நிறைவேற்றுனரும் இராணுவப்படைகளின் கட்டளை அதிகாரியுமாவார். அரசன் அவரது நிறைவேற்றதிகாரத்தை பிரதமரூடகவும் அமைச்சரவையூடாகவும் செயற்படுத்துகிறார். அம்மான் இதன் தலைநகரம் ஆகும்.

ஜோர்தான் ஆறு, தென்மேற்கு ஆசியாவில் ஓடுகின்ற ஒரு ஆறு ஆகும். இது சாக்கடலுள் (Dead Sea) விழுகின்றது. வரலாற்று அடிப்படையிலும், சமய அடிப்படையிலும் இது உலகின் முக்கிய புனித ஆறுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்த ஆறு 251 கிலோமீட்டர் (156 மைல்) நீளம் கொண்டது.

  1. லெபனானிலிருந்து உருவாகும் ஹஸ்பானி,
  2. ஹேர்மன் மலை அடிவாரத்திலிருந்து உருவாகும் [[பனியாஸ் ஆறு|பனியாஸ்],
  3. அதே ஹேர்மன் மலை அடிவாரத்திலிருந்து உருவாகும் டான்,
  4. லெபனானில் இருந்து உருவாகும் அயூன் ஆறு, அயூன்

என்பன இதன் முக்கிய துணை ஆறுகள் ஆகும்.